Friday, July 29, 2016

பெண்ணே பெண்ணே பொங்கி எழு

பல்லவி

பெண்ணே பெண்ணே பொங்கி எழு
வன்செயல் கண்டால் சீறி எழு
மௌனம் இனியும் வேண்டாம்
சத்தமிடு!

கடந்த காலம் மறந்து விடு
கவலை யாவும்; துறந்து விடு
வீரம் கொண்ட வேங்கையாய்
எழுந்துவிடு!

நீ தானே உலகின் கண்ணம்மா....
நீயின்றி உயிர்கள் ஏதம்மா

வானைத் தட்டும் கைகள் உனதாகட்டும்
உந்தன் பெருமை ஓங்கட்டும் எட்டுத் திக்கும்!

சரணம் 1

பெண்ணை மதித்திங்கு வாழும் ஆடவர்
எத்தனை பேரம்மா?
அவள் கண்ணீர் துடைத்திட துடிக்கும்
உள்ளம் உண்மையில் யாரம்மா?

அச்சத்தில் வாழ்ந்த பெண்களை யாருமே
மதித்திடவில்லையம்மா
போர் வாளை போன்று தைரிய உள்ளம்;
வேண்டும் அவசரமா

இனி பார்வையில் பயங்களில்லை
தோல்வியும் உனக்கு இல்லை
புறப்படு பெண்ணே புது விதி செய்ய!

தீ கூட தொட்டால் தான் சுடும்
பெண் பார்வை பட்டாலே சுடும்


சரணம் 1

அன்னை தெரேசா என்பவர் உலகம்
போற்றிடும் தாயம்மா
இந்தியச் செல்வம் கல்பனா சாவ்லா
இதயத்தின் தீபமம்மா

சுசந்திகா, சானியா மிர்சா
சாதனைப் பெண்களம்மா
மக்களை மதித்த சந்திரிக்கா அம்மை
வீரத்தின் வடிவமம்மா

கணவர் காந்தியுடன்
அறப் போர் செய்து வந்த
கஸ்தூரி Bபாயும் சாதனை பெண்ணம்மா

பெண்தானே வாழ்வின் ஆதாரம்
அவளின்றி யாவும் சேதாரம்

No comments:

Post a Comment