Sunday, June 11, 2017

வானவில் எனக்கோர் அழகு ஓவியம்


பல்லவி
வானவில் எனக்கோர் அழகு ஓவியம் உன்னை காணாமல் வானமே இடிந்து போய்விடும்
தேவதையின் மொழி எங்கே தேன் சிந்தும் விழி எங்கே தலை சாய்ந்திருக்க உன் தோள் எங்கே?
பாசம் ஊட்டும் விரல் எங்கே நேசம் வீசும் குரல் எங்கே எனக்கே எனை அறிவித்த நீ எங்கே?;
காலம் நம்மை பிரித்தது பிரிவோ என்னை எரித்தது

சரணம் 1
சின்ன வயதில் மின்மினி போல பறந்து திரிந்த வயல் மேடு இன்று உன்னை எங்கே என்று கேட்கிறதே
வண்ண மயிலின் தோகை போல விரித்துப் போட்ட உன் கூந்தல் இரவை எல்லாம் விலைக்கு வாங்கப் பார்க்கிறதே
ஆனா ஆவன்னா சொன்ன காலம்தான் ஆனா இன்னும் தான் மாறலயே.. ஏஏஏ

சரணம் 2
அன்னம் தண்ணி இல்லாமல் விண்ணும் மண்ணும் புரியாமல் நினைவு மட்டும் எரிமலையாகிப் போகிறதே
கன்னம் கிள்ளி நீ சொன்ன கனிவுச் சொற்கள் எல்லாமே நெஞ்சுக்குள்ளே சிற்பங்கள் ஆகிறதே
நானோர் ஏழையே நீயும் இல்லையே எங்கே நீ சென்றாய் என் சிநேகிதியே.. ஏஏஏ

அன்பே அன்பே கேட்கிறதா உயிர் உருகிடும் சத்தம்

பல்லவி

பெண்
அன்பே அன்பே கேட்கிறதா உயிர் உருகிடும் சத்தம்
என்னை எண்ண ி வாடுகிறேன் மனமுடையுதே நித்தம்
நெஞ்சோடு சேர்த்து வச்சேனே உன்னை
இனி என் கண்ணீர் ஈரமாக்குமே மண்ணை

சரணம் 1
ஆண்
கண்வழி நுழைந்து படித்துப் பார்க்கையில்
உயிலென எழுதித் தந்தாய் உயிரை
இன்று வந்து நீ அழித்துப் போகையில்
இதயத்தை பிழியுதடி கவலை

பெண்
தேள் கொட்டும் கனவுகள் தேடி வருகையில்
தெய்வங்கள் என்னை பார்க்கவில்லை
ஆளான பொண்ணு நான் அடிமையாகிடும்
விதியினை வெல்லும் வழி இல்லை


சரணம் 2

ஆண்
கைகோர்த்து நாங்கள் நடந்த கடற்கரை
இனிமேல் உன்னை கேட்கும்போது
என்னைப் பிரிந்துநீ சென்ற வலியினை
சொல்லவதற்கு வார்த்தைகளே இல்லை

பெண்
செடியில் பூத்தபூ செடியைப் பிரிகையில்
என்றைக்குமே கண்ணீர் கொள்வதில்லை
உன்னை பிரிந்து நான் சென்றபோதிலும்
எந்தன் காதல் என்றும் அழிவதில்லை

கண் மூடி காத்திருக்கேன்

கண் மூடி காத்திருக்கேன்
கனவில் வந்திடு
கவியாய் நானிருக்கேன்
என்னைப் படித்திடு (2)

இதோ இதே இதோ இதோ
இதோ இதே இதோ இதோ

இதோ இதோ
நீயே என்னை ஆளும்
ஆண் புலி

இதோ இதோ
உன்னை தேடுது என்
இரு விழி

இதோ இதோ
காதல் போதை தரும்
நிலவடி

பார்க்கின்ற திசையில் எல்லாம்
உந்தன் முகமடி

விழி அசைவில் தெறிக்கும்
மின்னல் கோடிதான்
அடியே இனியவள் நீ
எந்தன் ஜோடிதான்

வந்திடுவேன் நானும்
உன்னைத் தேடிதான்

உனக்காய் வாழுமந்த
உயிரும் நானேதான்

பச்சோந்தியின் பாசக் கார உறவே

பச்சோந்தியின் பாசக் கார உறவே அழகாய் பூத்த நஞ்சை கொண்ட மலரே பைத்தியமாக்கும் சேலை உடுத்த நிலவே நெஞ்சை பொசுக்கும் அற்புத அக்கினிக் குழம்பே

பெண் எல்லாம் பேய் தானா பேய் என்றால் பெண் தானா
பொண்ண பார்த்ததும் மங்கும் புத்தி அவ வச்சிருப்பா கண்ணுல கத்தி நல்லா பாரு அவ ஒரு பத்ர காளி நீ பாக்கலன்னா ஆகிடுவே காலி
துண்டுதுண்டாய் உடைய வேணுமா ரெண்டு கண்ணும் கலங்க வேணுமா உன்னை நீயே அறிய வேணுமா பொண்ண பார்ரா மச்சி
போதையேறி அலைய வேணுமா கொஞ்சம் நாளில் மரணம் வேணுமா இதையும் நீயே உணர வேணுமா பொண்ண பார்ரா மச்சி
Twitter Facebook வருவாளுக Sweetட்டா Sweetட்டா கதைப்பாளுக Purseஸ Purseஸ பாப்பாளுக காசில்லன்னா முறைப்பாளுக
Whiteஆ Whiteஆ இருப்பாளுக Lightஆ Lightஆ சிரிப்பாளுக ATMஆ உன்னை நினைப்பாளுக காசில்லன்னா முறைப்பாளுக
பெண் எல்லாம் பேய் தானா பேய் என்றால் பெண் தானா


எல்லா பூவிலும் தேனை தேடும் வண்டே பொய்கள் பேசி காதல் செய்யும் புயலே கிளைகள் விட்டு கிளைகள் தாவும் குரங்கே தவறுகள் செய்தும் ஏற்றுக்கொள்ளா திமிரே

ஆண் எல்லாம் பொய் தானா பொய் என்றாலே ஆண் தானா
காதலுன்னு சொல்லிக்கிட்டு வருவான் கன்னத்துல முத்தம் ஒன்னு தருவான் நல்லா பாரு ராமன் அவன் தானா நீ பாக்கலன்னா வாழ்க்க போகும் வீணா
சின்ன சின்ன கலக்கம் வேணுமா இன்பங்கள தொலைக்க வேணுமா கண்ணீர் வலி அறிய வேணுமா லவ்வப் பண்ணி பாருடி
சீதை போல வாழ வேணுமா இல்ல பாதை மாறி போக வேணுமா வேறுபாடு அறிய வேணுமா அந்த எழவப் பண்ணிப் பாருடி
Neatஆ Neatஆ உடுப்பானுங்க Routeஅ போட்டு பாப்பானுங்க Girl Friend நீ தான் என்பானுங்க அடிமையா நினைப்பானுங்க
Daarling Sweetyனு சொல்வானுங்க Parkகு Beachசுனு அழைப்பானுங்க Gap கிடைக்கும் நேரத்துல Escape ஆயிருவானுங்க
ஆண் எல்லாம் கண்ணீர் தானா கண்ணீர் என்றாலே ஆண் தானா


நட்பு என்றால் நறும்பூ டா கடிச்சா இனிக்கிற கரும்புடா சக்தி மிக்க இரும்புடா நாளும் குறும்பு டா
பாசம் தேடும் தோழமை டா சோகம் தீர்க்கும் தோள்களடா வாழ்வில் வேண்டும் நண்பரடா நட்பில்லன்னா ஏழையடா
ஆண்பாலும் பெண்பாலும் நட்பாலே சிறந்திடும் நாள்தோறும் எண்ணங்கள் தப்பின்றி இருந்திடும்
கண் மறைந்து போகையில கண்ணீர்தான் மறைத்திடும் இதயக்குழி வெறுமையாகி பிரிவின் வலி நிறைத்திடும்
காசு பாராமல் மலந்த உறவு நேசம் மட்டும் தேடிடும் பாதி தின்று மீதி கொடுக்கும் இனிய தருணம் அது

பட்டாம் பூச்சியின் இறக்கை போல்

பல்லவி

ஆண்
பட்டாம் பூச்சியின் இறக்கை போல்
உன் விழி இரண்டும் படபடக்கும்
பட்டு போன்ற விரல் பார்த்து
மூச்சு மட்டும் தடதடக்கும்

பெண்
கைகள் போர்த்து சாலையெல்லாம்
உன்னுடன் மட்டும் வரப் பிடிக்கும்
ஓரப் பார்வை நீ பார்த்தால்
இதயம் ஏனோ வெடவெடக்கும்

சரணம்

ஆண்
வார்த்தைகள் கிளியாக நீ சொல்கையில்
அங்கே பார் விண்மீன்கள் சிரிக்கின்றது
கோபத்தில் நீ சொன்ன வார்த்தைகளும்
என் நெஞ்சில் மலர்போல இருக்கின்றது

பெண்
பிழையாக நீ எழுதும் கவிதைகளோ
டயறிக்குள் மயிலிறகாய் இருக்கின்றது
புளி மாங்காய் உப்பிட்டு நீ தந்தது
மனசுக்குள் மறக்காமல் இனிக்கின்றது

சரணம்

ஆண்
என் வீட்டு ரோஜாக்கள் தினம் பூப்பது
அன்பே உன் கருங்கூந்தலில் குடியேறத்தான்
வான் மீட்டும் சங்கீத மழை பெய்வது
பெண்ணே உன் இதழோடு விளையாடத்தான்

ஆண்
பெண்ணாக நான் மண்ணில் பிறந்திருப்பது
கண்ணாளா நானுந்தன் தோள் சேரத்தான்
கண் ஓரம் வழிகின்ற சிறு நீர்துளி
எந்நாளும் நீ வேண்டும் அதற்காகத்தான்

வா வா நம் தலைவா

வா வா நம் தலைவா
மறுபடி வா நீ விரைவா
உன்னை நேசிக்கும் மக்களின் உறவா – நீ
நிலைச்சிருக்க நெஞ்சில் நிறைவா

நீ தொட்டா வெடிக்கிற தோட்டா
தப்பெல்லாம் அழியும் நீ பாத்தா..

பல்லவி

தட்டிக் கொடுக்குற தலைவன் நீயடா
நீ கெட்டிக்கார ஆளடா
தட்டிக் கேட்குற தலைவன் நீயடா
நீ தப்பை எதிர்க்கிற வீரன்டா..

சிங்கத்த போலிவன் கர்வம்டா..
உன் பார்வையில் அடங்கும் சர்வம்டா
கைவிரல் மொத்தம் பத்துடா
உன் பேரை சொன்னால் கெத்துடா

சரணம் 1

தாகம் உயிரைக் கொல்லுது என்று
சமுத்திரம் தாகத்தை தீர்க்காதே
பிழைப்புக்காக பிழை செய்பவனை
மனிதப் பிறவியில் சேர்க்காதே

வேட்டை ஆடிடும் புலி ஒருபோதும்
பாவம் புண்ணியம் பார்க்காதே
நாட்டை அழிக்கிற துரோகிகளை நீ
கருணைக் கண்ணால் நோக்காதே

கைவிரல் மொத்தம் பத்துடா
நீ விருட்சமாகும் வித்துடா

சரணம் 2

சூரியன் தொலைவில் இருக்குது என்று
பூமியில் வெளிச்சம் குறையாது
கல்லும் முள்ளும் குத்துது என்று
பாதங்கள் பயணத்தை மறுக்காது

கடமையில் நீயொரு தீப்பொறி போல
மடமைகள் உன்னிடம் பழிக்காது
நரம்பினில் ஓடிடும் உதிரத்தைப் போல
இருந்திடு வேகத்தைக் குறைக்காது

கைவிரல் மொத்தம் பத்துடா
நீ எங்க நாட்டு சொத்துடா


தனியாக நானிங்கே

பல்லவி

தாய்
தனியாக நானிங்கே
தவிக்கிறேன் நீயேங்கே
இன்பங்கள் புகையாகி
இல்லாமல் போனதெங்கே


சரணம் 1

தந்தை
நான் போட்ட கோலங்கள்
வெறும் கோடாய் ஆனதம்மா
நான் வாங்கிய சுவாசங்கள்
விஷம் வாங்கிப் போனதம்மா

தாய்
என் வயித்தில் வளந்தகொடி
என் பேச்சை மீறுதம்மா
ஒளித் தீபம் வீறுகொண்டு
காட்டுத் தீ ஆகுதம்மா

புதிதாகவிதிமாறி
என் மனதை வாட்டுதம்மா

சரணம் 2

மகள்
புயல் காற்று வீசுகையில்
புக்கள் மேல் பாசமம்மா
கோடையில் வாடுகையில்
தண்ணீரைத் தேடுதம்மா

உருமாறிய என் காதல்
உலைநீராய் கொதிக்குதம்மா
தாமரைமேல் நீர் போல
என் வாழ்வும் ஆனதம்மா

வாழ்க்கையின் தத்துவத்தை
வாழ்வெனக்கு சொன்னதம்மா