Sunday, June 11, 2017

வா வா நம் தலைவா

வா வா நம் தலைவா
மறுபடி வா நீ விரைவா
உன்னை நேசிக்கும் மக்களின் உறவா – நீ
நிலைச்சிருக்க நெஞ்சில் நிறைவா

நீ தொட்டா வெடிக்கிற தோட்டா
தப்பெல்லாம் அழியும் நீ பாத்தா..

பல்லவி

தட்டிக் கொடுக்குற தலைவன் நீயடா
நீ கெட்டிக்கார ஆளடா
தட்டிக் கேட்குற தலைவன் நீயடா
நீ தப்பை எதிர்க்கிற வீரன்டா..

சிங்கத்த போலிவன் கர்வம்டா..
உன் பார்வையில் அடங்கும் சர்வம்டா
கைவிரல் மொத்தம் பத்துடா
உன் பேரை சொன்னால் கெத்துடா

சரணம் 1

தாகம் உயிரைக் கொல்லுது என்று
சமுத்திரம் தாகத்தை தீர்க்காதே
பிழைப்புக்காக பிழை செய்பவனை
மனிதப் பிறவியில் சேர்க்காதே

வேட்டை ஆடிடும் புலி ஒருபோதும்
பாவம் புண்ணியம் பார்க்காதே
நாட்டை அழிக்கிற துரோகிகளை நீ
கருணைக் கண்ணால் நோக்காதே

கைவிரல் மொத்தம் பத்துடா
நீ விருட்சமாகும் வித்துடா

சரணம் 2

சூரியன் தொலைவில் இருக்குது என்று
பூமியில் வெளிச்சம் குறையாது
கல்லும் முள்ளும் குத்துது என்று
பாதங்கள் பயணத்தை மறுக்காது

கடமையில் நீயொரு தீப்பொறி போல
மடமைகள் உன்னிடம் பழிக்காது
நரம்பினில் ஓடிடும் உதிரத்தைப் போல
இருந்திடு வேகத்தைக் குறைக்காது

கைவிரல் மொத்தம் பத்துடா
நீ எங்க நாட்டு சொத்துடா


No comments:

Post a Comment