Thursday, February 11, 2016

காதல் இதுதானா சொல் என் அன்பே

பல்லவி

பெண்
காதல் இது தானா சொல் என் அன்பே
மோதல் வந்தாலும் நீ விலகிச் செல்லாதே
சாரல் மழையாக வந்தாய் அன்பே
தூறல் பெய்து என் நெஞ்சை அள்ளாதே

உன்னைப் பார்த்தாலே நானும் பூக்கின்றேன்
நீயும் வந்தாலே நானும் வேர்க்கின்றேன்

ஆண்
காலைப் பனியாக நீயும் வந்தாய்
சூரியனையே நீ குளிரச் செய்தாயே
சேலை நிலவாக நீயும் வந்தாய்
வானத்தையே நீ உன் பக்கம் ஈர்த்தாயே

உன்னை பாராமல் ஜீவன் வாழாதே
நீயும் இல்லாமல் நாட்கள் நீளாதே

சரணம்

பெண்
கண்ணுக்குள் என்னை வைத்து காத்திரு
மண்ணுக்குள் வேரைப் போல சேர்ந்திரு
நீதானே என்றும் எந்தன் சங்கீதம்
நீயின்றி என்னவாகும் என் கீதம்

உன்னைப் பார்த்தாலே நானும் பூக்கின்றேன்
நீயும் வந்தாலே நானும் வேர்க்கின்றேன்

ஆண்
நீ என்னை நெஞ்சுக்குள்ளே சேர்த்திரு
தாயாகி சேயைப் போல பார்த்திரு
நீ சொல்லும் சொல்லே எந்தன் மந்திரம்
களவாட செய்தாய் என்ன தந்திரம்

உன்னை பாராமல் ஜீவன் வாழாதே
நீயும் இல்லாமல் நாட்கள் நீளாதே

Wednesday, February 10, 2016

உயிரை வதைத்துப் போடும் கல்லூரிப் பிரிவு

பல்லவி

உயிரை வதைத்து போடும்
கல்லூரிப் பிரிவு இது
துயரத்தை இசையாய் பாடும்
கொடிய கணங்கள் இது

துயரத்தில் எரிகிறோம்
ஏக்கத்தில் கரைகிறோம்
பிரிவதற்கு மனமின்றி
வாடுகின்றோம்

சரணம் 1

கூவும் குயிலின் ராகம்
இனிமையில்லை இனியும்
வாடினோம் பாடினோம்
தணியவில்லை துயரம்

விடைபெறப் போகும் இன்றைய நாளில்
ஒன்றாய் கூடுகிறோம்
இன்பங்கள் இனிமேல் இல்லை என்று
இதயம் வாடுகிறோம்

எங்கள் வானின் மேகமே
பிரியும் நேரம் சோகமே
கவலை தந்த காலமே
காலம் தந்த காயமே!


சரணம் 2

வரண்ட நிலத்தில் ஓர்நாள்
மழை வந்து போனால்
சிலிர்த்திடும் செடியெல்லாம்
நட்பும் மழை தானே!

மழைத்துளிபோல் இன்று சிதறும் கணமதில்
மனதுக்குள் பதறுகிறோம்
ஒன்றாய் நாமில்லை இனிமேல்
என்கின்றபோது துயரத்தில் கதறுகிறோம்

பிரிவு ஒரு பாரமே
பிரியும் நொடி கூறுமே
எங்கள் மனதின் ஓரமே
நட்பின் நினைவு நீளுமே!

எவன்டா எவன்டா

பல்லவி

எவன்டா எவன்டா
நான் எமன்டா எமன்டா
எவன்டா எவன்டா
நான் எமன்டா எமன்டா

துரத்தித் துரத்தி வாரேன்
தூக்கில் ஏத்தப் போறேன்
விரட்டி விரட்டி வாரேன்
விடாமல் கொல்ல போறேன்

எவன்டா
நான் எமன்டா!

சரணம் 1

பணத்தின் பின்னாலே மனிதா செல்கிறாய்
உனக்கு பணம் தான் எமன்
மதுவின் பின்னாலே மயக்கமாய் செல்கிறாய்
உனக்கு மதுதான் எமன்

கண்ணுல பொய் வச்சி சிரிக்கிறாய்
உனக்கு பொய்தான் எமன்
பெண்ணுல கண் வச்சி மோசமா திரியிறாய்
உனக்கு பெண்தான் எமன்

உயிரைப் பறித்தால்தான் நான் எமனா
இல்லை ஆசை மீறினாலும் எமன்டா எமன்டா!


சரணம் 2

பொறாமை கொண்டு வாழும் மனிதா
உனக்கு குணம்தான் எமன்
உயிருக்கு விலை பேசும் மனிதா
உனக்கு கொலைதான் எமன்

துரோகத்தை பயமின்றி செய்கிறாய்
உனக்கு போலிதான் எமன்
அதிகாரம் கிடைத்தால் அடிமையாக்குறாய்
உனக்கு ஆணவம் எமன்

உயிரைப் பறித்தால்தான் நான் எமனா
இல்லை நீதி தவறிடினும் எமன்டா எமன்டா!

நான் என்னத்த சொன்னேன்

பல்லவி

பெண்  
என் எண்ணத்த சொன்னேன்
 நீ என்னத்த நெனச்சே?
ஆண்  
உன் கன்னத்த பாத்து
அந்த வண்ணத்தில் தொலஞ்சேன்

சரணம் 1

பெண்  
வரைமுறை இன்றி வாலிபத்தின்
 வாசத்த காண்போமா?
ஆண்  
கலங்கர ஒளியா நாம் மாறி
காதல சேர்ப்போமா?

பெண்  
விடுமுறை என்பதே இல்லாம
 நானும் உன்ன நினைப்பேன்
ஆண்  
விடுதலை தந்திய இயலாம
விரும்பியே உன்ன அணைப்பேன்

சரணம் 2

ஆண்  
காற்றாய் நானும் உருமாறி
 உனக்குள் நுழைந்திடவா
பெண்  
பாட்டாக நான் எனை மாற்றி
உனக்குள் கலந்திடவா

ஆண்  
இலக்கியமாய் நீ நுழைந்தாயே
நான் இலக்கணம் ஆகிவிட்டேன்
பெண்  
தவமின்றி நீ கிடைத்தாயே நான்
தலைக்கனம் ஆகிவிட்டேன்