Wednesday, February 10, 2016

உயிரை வதைத்துப் போடும் கல்லூரிப் பிரிவு

பல்லவி

உயிரை வதைத்து போடும்
கல்லூரிப் பிரிவு இது
துயரத்தை இசையாய் பாடும்
கொடிய கணங்கள் இது

துயரத்தில் எரிகிறோம்
ஏக்கத்தில் கரைகிறோம்
பிரிவதற்கு மனமின்றி
வாடுகின்றோம்

சரணம் 1

கூவும் குயிலின் ராகம்
இனிமையில்லை இனியும்
வாடினோம் பாடினோம்
தணியவில்லை துயரம்

விடைபெறப் போகும் இன்றைய நாளில்
ஒன்றாய் கூடுகிறோம்
இன்பங்கள் இனிமேல் இல்லை என்று
இதயம் வாடுகிறோம்

எங்கள் வானின் மேகமே
பிரியும் நேரம் சோகமே
கவலை தந்த காலமே
காலம் தந்த காயமே!


சரணம் 2

வரண்ட நிலத்தில் ஓர்நாள்
மழை வந்து போனால்
சிலிர்த்திடும் செடியெல்லாம்
நட்பும் மழை தானே!

மழைத்துளிபோல் இன்று சிதறும் கணமதில்
மனதுக்குள் பதறுகிறோம்
ஒன்றாய் நாமில்லை இனிமேல்
என்கின்றபோது துயரத்தில் கதறுகிறோம்

பிரிவு ஒரு பாரமே
பிரியும் நொடி கூறுமே
எங்கள் மனதின் ஓரமே
நட்பின் நினைவு நீளுமே!

No comments:

Post a Comment