Wednesday, January 18, 2017

மக்கள் தேவை ஒன்றே என்னுடைய சேவை

பல்லவி

மக்கள் தேவை ஒன்றே என்னுடைய சேவை
என்றவாறு வாழ்ந்து வரும் எங்கள் அமைச்சரே
நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் எங்கள் அமைச்சரே

ஊர்பேர் போற்றும் எங்களுர்; தலைவர்
அவரை வாழ்த்துவோம் பெரியோர் சிறியோர்

எம் துன்பங்களை தீர்த்து அவர் சந்தோசத்தை தந்தார்
எம் சந்தோசத்தைப் பார்த்து அவர் நெஞ்சம் பூத்து நின்றார்


சரணம்

ரோயலில் சேர்ந்து உயர் கல்வியை கற்றார்
வெளிநாடு சென்று பல பட்டங்கள் பெற்றார்

கிழக்கின் எழுச்சிக்காக ஆட்சி ஏறினார்

கல்வியின் பெருமை தனை நன்றே உணர்ந்தவர்
மாணவர் கல்விக்காக நாளும் உழைத்தவர்
ஆட்சியின் நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்தவர்
அனைவரும் போற்றும்படி வாழ்ந்து வருபவர்

ஏழு வயதிலேயே முழு அல்குர்ஆனையும் கற்றார்
பல தொண்டுகளை செய்து மக்கள் மனம் வென்றார்
(மக்கள் தேவை)



சரணம் 2

அரசியல் வாழ்வில் சிங்கம் போல் துணிவு
சரிசமமாக என்றும் பழகிடும் பணிவு
அமைச்சர்  மாண்புமிகு நஸீர் ஹாபிஸே


பணிப்பெண்ணாய் போவதையே தடுத்துநிறுத்தியே
கிழக்கில் பலரும் வாழ வேலை கொடுத்தவர்
ஆசிரியர் ஊக்குவிப்பு தொகையை வழங்கியே
பாலர் பாடசாலை பலதை வளர்த்தவர்

கல்வி சுகாதார அரச திணைக்களத்தில்
அரசியலே வேண்டாம் என்று வாழ்ந்து வரும் வள்ளல்
(மக்கள் தேவை)

யார் உன் உணர்வுக்குள் ஐக்கியம் ஆனாள்

பெண்
...............
யார் உன் உணர்வுக்குள் ஐக்கியம் ஆனாள்
யார் ஒரு மலரென உன் நெஞ்சில் பூத்தாள்
யார் உன் பாதங்கள் தாங்கிட வந்தாள்
யார் பெண் எனும் மந்திரமானாள்

இறைவனின் படைப்பினில் மிருதுவானவள் இவள்தானே
இயற்கையின் அழகெல்லாம் சேர்த்து செய்த இரு கண்தானே
நேசங்கள் தோன்றிட மூல காரணமும் பெண்தானே
பெண்ணிணல்லா பூமியோ வெறுமையான மண்தானே


ஆண்
...............
யார் என் வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கொடுத்தாள்
யார் என் கவலைக்கு விடுதலை அளித்தாள்
யார் மழைத்துளி போல் வந்து விழுந்தாள்
யார் கவிதைக்குள் கிளியென ஒளிந்தாள்

கவலைகள் சிதறிவிடும் அவளென்னை பார்த்து சிரித்தாலே
வாழ்க்கையே முடிந்திடும் பூங்குயில் என்னை வெறுத்தாலே
பிறந்ததால் பயன் உண்டு  என்னை உணந்திட வைத்தாளே
அடடடா ம்ம் இன்பத்தை நெஞ்சினிலே வைத்தாளே


கொஞ்சம் கொஞ்சிப் பேசடி

ஆண்
....................
கொஞ்சம் கொஞ்சிப் பேசடி செல்லக் கொலுசொலியே
கொஞ்சம் என்னைப் பாரடி எந்தன் உயிர் துளியே
ஓரப் பார்வை வீசிச் செல்கிறாய்
காதல் வாசம் பூசிச் செல்கிறாய்
யே யே யே...

புத்தகம் சுமக்கிற பூவே
உன்னை வட்டமிடும் வண்டு நானே..
டியூஷன் கிளியே நீயே
றெக்க கட்டி பறப்பேன் நானே

ஏ ஏ முறைக்கிறியே
என்ன கவுக்குறியே

நீ கொள்ளும் கோபங்கள் அழகு
முகம் பார்ப்பேன் கொஞ்சம் நிமிரு
என்னை இழுத்தது உந்தன் திமிரு
காதல் அம்பு துளைக்குது துளைக்குது

கொஞ்சம் கொஞ்சம் பாரடி தங்கத் தாமரையே
கொஞ்சம் கொஞ்சிப் பேசடி செல்லக் கொலுசொலியே

மழைச் சாரல் போல் வந்து உன்னை நனைத்துச் செல்லுவேன்
அலைமோதும் கடலாகி உன்னை அணைத்துக் கொள்ளுவேன்

பெண்
.......................
நீ செய்த குறும்புகள் ரசித்தேன்
உன்னை எண்ணி உள்ளுக்குள் சிரித்தேன்
உனக்காய் என் சிறகுகள் விரித்தேன்
காதல் செடி முளைத்தது முளைத்தது

இருவிழி பார்க்கும்போது

இருவிழி பார்க்கும்போது
இருதயம்  மாறுதே
கனிமொழி பேசும்போது
கவலைகள் தீருதே

இந்தக் காதல் முடிந்துவிடின்..
எந்தன் சுவாசம் கருகிவிடும்
எனதுயிர் உனக்காகவே
.................................
இருவிழி பார்க்கும்போது
இருதயம்  மாறுதே
கனிமொழி பேசும்போது
கவலைகள் தீருதே
................................
பறவைகள் ஏங்கும்
பார்த்ததுமே உன் விழி படபடத்தால் ஓ
உன் விழி படபடத்தால்

உயிரிசை கேட்கும்
இதழ்களையே நீ மெல்;ல அசைத்துவிட்டால் ஓ
நீ மெல்;ல அசைத்துவிட்டால்
.....................................
நினைவோ நீளும்
எறும்பாய் ஊறும்
வலியும் கூடும்
அதனாலே அதனாலே

இருவிழி பார்க்கும்போது
இருதயம்  மாறுதே
கனிமொழி பேசும்போது
கவலைகள் தீருதே

இந்தக் காதல் முடிந்துவிடின்..
எந்தன் சுவாசம் கருகிவிடும்
எனதுயிர் உனக்காகவே