Monday, December 21, 2015

எதிர்பாரா நேரத்தில்

 பல்லவி
ஆண்
எதிர்பாரா நேரத்தில்
என் எதிரே வந்தவளே
சொக்க வைக்கும் மிகை அழகால்
சொர்க்கத்தைத் தந்தவளே!

அனு பல்லவி
பெண்
வீசிச் சென்றாய் ஒரு பார்வை - அந்த
விழியசைவில் மரித்தேனே
தென்றலாக சிரித்துச்சென்றாய் - அந்த
சுகந்தத்தை சுகித்தேனே!

சரணம் 1
ஆண்
உன்னழகு எனக்குள்ளே மோதி
நறுமணமாய் திகழுதடி தோழி
சந்திரனின் அழகெல்லாம் போலி
சகி உந்தன் அழகில் அவை காலி

பார்த்துவிட்டுப் போனால் போதுமா
பார்வை வந்து வந்து மோதுமா
என் இதயத் தவிப்புனக்கு கேட்குமா
உன் இதயம் என் இதயம் ஏற்குமா

சரணம் 2
பெண்
எனைக் கடந்து நீ போன பின்பு
சாலையில் ஓரமெல்லாம் பூக்கள்
பல்லவியாய் உனை ஏற்கச் சொல்லி
பரிதவித்துக் கிடக்குதென் பாக்கள்

அருவியாய் நெஞ்சுக்குள் விழுந்தாய்
அலைகளின் சலசலப்பாய் நுழைந்தாய்
மழை போல கடல் என்னில் பொழிந்தாய்
மனதிற்குள் சூரியனாய் எழுந்தாய்


Sunday, December 13, 2015

அதிகாலை பொழுது எல்லாம்


பல்லவி

அதிகாலை பொழுது எல்லாம்
அழகாக விடியுதிப்போதான் ஓ ஓ ஓ
ஸ்ருதி சேர;ந்த பாடல்போல
வாழ்க்கையும் இனிக்குது இப்போதான் ஓ ஓ ஓ

இதுபோல நானே
இருந்ததில்லைதானே
இதுபோல நானே நானே
இருந்ததே இல்லைதானே

சரணம்

கண் ரெண்டும் மோதும்போதும்
நாணம்தான் எழுகிறதே
பூவோடு கைகள்கோர;த்து
வாழ்ந்திடத்தான் பிடிக்கிறதே

மழைத்தூறல் வந்தாலே
நனைந்திடத்தான் தோன்றிடுதே
விண்மீன்கள் போல என்றும்
மின்னிடத்தான் தோன்றிடுதே

இதுபோல ஆஆஆ எத்தனையோ ஒஒஒ
ஆசைகள் உள்ளுக்குள்ள
நான் வளர;த்த கற்பனைகள்
தலையாட்டும் நெஞ்சுக்குள்ள..

இதற்கெல்லாம் காரணம் என்ன
சொன்னால் புரியுமா...
நீதானே நீதானே இதயக் கள்வனே .....

Sunday, November 8, 2015

கானக் குயில்கள் வாழ்த்து செய்தி பாடும்

பல்லவி

கானக் குயில்கள் வாழ்த்து செய்தி பாடும் - இளம்
காற்று வந்து காதல் பூக்கள் சூடும்

இந்தப் பூங்குயில் தினம் தோறுமே
பாடல்கள் இனி பாடுமே
தாளம் தட்டிடுடம் மேளம் கொட்டிடும் நாளிலே

(கானக் குயில்கள்)

சரணம் 1

கண்கள் பட்டது உன்னைத் தொட்டது அன்று..
இன்று உன்னை மயக்கும் செல்ல செண்பக மலரானது…

நாணம்; சொட்டிடும் சாரல் கொட்டிடும் நெஞ்சம் - உன்
பார்வை பட்டதும் கரைந்து போகும் பனியானது

என் காதலே வாழ்வானதே
சந்தோசமே நான் வாழ்வதே

நீ இல்லை என்றால் நானும் இல்லை மன்னவா!

(கானக் குயில்கள்)

சரணம் 2

என்னைத் தாண்டிச் செல்லும் அந்த நொடியில் - உன்
கண்ணில் பார்த்தேன் என்னைக் கொல்லும் லட்சம் மின்னல்

உன்னைத் தினமும் நெஞ்சில் சுமந்து இருப்பேன் - நீ
போகும் நிமிடம் எனக்குள் தோன்றும் கோடி இன்னல்

என் வாழ்க்கையே உனக்கானதே
நீ நீங்கினால் நான் கானலே

எந்தன் காதல் இன்னும் கொஞ்சம் சொல்லவா?

(கானக் குயில்கள்)