Monday, December 21, 2015

எதிர்பாரா நேரத்தில்

 பல்லவி
ஆண்
எதிர்பாரா நேரத்தில்
என் எதிரே வந்தவளே
சொக்க வைக்கும் மிகை அழகால்
சொர்க்கத்தைத் தந்தவளே!

அனு பல்லவி
பெண்
வீசிச் சென்றாய் ஒரு பார்வை - அந்த
விழியசைவில் மரித்தேனே
தென்றலாக சிரித்துச்சென்றாய் - அந்த
சுகந்தத்தை சுகித்தேனே!

சரணம் 1
ஆண்
உன்னழகு எனக்குள்ளே மோதி
நறுமணமாய் திகழுதடி தோழி
சந்திரனின் அழகெல்லாம் போலி
சகி உந்தன் அழகில் அவை காலி

பார்த்துவிட்டுப் போனால் போதுமா
பார்வை வந்து வந்து மோதுமா
என் இதயத் தவிப்புனக்கு கேட்குமா
உன் இதயம் என் இதயம் ஏற்குமா

சரணம் 2
பெண்
எனைக் கடந்து நீ போன பின்பு
சாலையில் ஓரமெல்லாம் பூக்கள்
பல்லவியாய் உனை ஏற்கச் சொல்லி
பரிதவித்துக் கிடக்குதென் பாக்கள்

அருவியாய் நெஞ்சுக்குள் விழுந்தாய்
அலைகளின் சலசலப்பாய் நுழைந்தாய்
மழை போல கடல் என்னில் பொழிந்தாய்
மனதிற்குள் சூரியனாய் எழுந்தாய்


No comments:

Post a Comment