Thursday, February 11, 2016

காதல் இதுதானா சொல் என் அன்பே

பல்லவி

பெண்
காதல் இது தானா சொல் என் அன்பே
மோதல் வந்தாலும் நீ விலகிச் செல்லாதே
சாரல் மழையாக வந்தாய் அன்பே
தூறல் பெய்து என் நெஞ்சை அள்ளாதே

உன்னைப் பார்த்தாலே நானும் பூக்கின்றேன்
நீயும் வந்தாலே நானும் வேர்க்கின்றேன்

ஆண்
காலைப் பனியாக நீயும் வந்தாய்
சூரியனையே நீ குளிரச் செய்தாயே
சேலை நிலவாக நீயும் வந்தாய்
வானத்தையே நீ உன் பக்கம் ஈர்த்தாயே

உன்னை பாராமல் ஜீவன் வாழாதே
நீயும் இல்லாமல் நாட்கள் நீளாதே

சரணம்

பெண்
கண்ணுக்குள் என்னை வைத்து காத்திரு
மண்ணுக்குள் வேரைப் போல சேர்ந்திரு
நீதானே என்றும் எந்தன் சங்கீதம்
நீயின்றி என்னவாகும் என் கீதம்

உன்னைப் பார்த்தாலே நானும் பூக்கின்றேன்
நீயும் வந்தாலே நானும் வேர்க்கின்றேன்

ஆண்
நீ என்னை நெஞ்சுக்குள்ளே சேர்த்திரு
தாயாகி சேயைப் போல பார்த்திரு
நீ சொல்லும் சொல்லே எந்தன் மந்திரம்
களவாட செய்தாய் என்ன தந்திரம்

உன்னை பாராமல் ஜீவன் வாழாதே
நீயும் இல்லாமல் நாட்கள் நீளாதே

No comments:

Post a Comment