Sunday, June 11, 2017

பட்டாம் பூச்சியின் இறக்கை போல்

பல்லவி

ஆண்
பட்டாம் பூச்சியின் இறக்கை போல்
உன் விழி இரண்டும் படபடக்கும்
பட்டு போன்ற விரல் பார்த்து
மூச்சு மட்டும் தடதடக்கும்

பெண்
கைகள் போர்த்து சாலையெல்லாம்
உன்னுடன் மட்டும் வரப் பிடிக்கும்
ஓரப் பார்வை நீ பார்த்தால்
இதயம் ஏனோ வெடவெடக்கும்

சரணம்

ஆண்
வார்த்தைகள் கிளியாக நீ சொல்கையில்
அங்கே பார் விண்மீன்கள் சிரிக்கின்றது
கோபத்தில் நீ சொன்ன வார்த்தைகளும்
என் நெஞ்சில் மலர்போல இருக்கின்றது

பெண்
பிழையாக நீ எழுதும் கவிதைகளோ
டயறிக்குள் மயிலிறகாய் இருக்கின்றது
புளி மாங்காய் உப்பிட்டு நீ தந்தது
மனசுக்குள் மறக்காமல் இனிக்கின்றது

சரணம்

ஆண்
என் வீட்டு ரோஜாக்கள் தினம் பூப்பது
அன்பே உன் கருங்கூந்தலில் குடியேறத்தான்
வான் மீட்டும் சங்கீத மழை பெய்வது
பெண்ணே உன் இதழோடு விளையாடத்தான்

ஆண்
பெண்ணாக நான் மண்ணில் பிறந்திருப்பது
கண்ணாளா நானுந்தன் தோள் சேரத்தான்
கண் ஓரம் வழிகின்ற சிறு நீர்துளி
எந்நாளும் நீ வேண்டும் அதற்காகத்தான்

No comments:

Post a Comment