Friday, July 29, 2016

காலம் என்மேல் கோபம்கொண்டு

பல்லவி

காலம் என்மேல் கோபம்கொண்டு
காதல் வலியைத் தந்தது..
வலியை மட்டும் தந்துவிட்டு
வாழு என்று சொன்னது

அனு பல்லவி

வாழ்ந்த வாழ்க்கை போதுமேன்று
வாழ்க்கை எனக்குச் சொன்னது
நினைவுகள் நெஞ்சில் மேலோங்கி
என்னை வதைத்து தின்றது

சரணம் 1

தீபம் ஏற்றும் எண்ணத்தில்
தீப் பிடித்துக் கொண்டது
லாபம் என்ன உள்ளதென்று
எந்தன் வாழ்வைக் கொன்றது

சாபம் வந்து விழுந்ததுபோல்
காதல் மரமும் காய்ந்தது
கோபம் கொண்ட விதிதானோ
சோகம் தந்து ஓய்ந்தது

சரணம் 2

பூவாய் நினைத்த காலங்கள்
புயலாய் மாறிப் போனது
தேனாய் இனித்த நினைவெல்லாம்
தேளைப் போல ஆனது

பௌர்ணமி போன்ற என் காதல்
தேய் பிறையாகிப் போனது..
சமுத்திரம் போன்ற கனவெல்லம்
ஓடை என்று ஆனது

No comments:

Post a Comment