Friday, July 29, 2016

தவறாமல் தவறெல்லாம்


பல்லவி

தவறாமல் தவறெல்லாம்
செய்கிறானே சைத்தான் - அவன்
செய்யும் தவறு போதாதென்று
எம்மை செய்ய வைத்தான்


சரணம் 1

வீராப்பு பேசின பையன் பெண்
மாராப்பில் தன்னை தொலைப்பான்
சாராயம் தொடாத பையன் அந்த
காதல் போதையில விழுவான்

பெண்ணாசயில்லாம வாழ்ந்தவனும்
கண் ஜாடயில் கட்டுண்டு கிடப்பான்
மண்ணாசயில்லாம வாழ்ந்தவனும்
பேராசையில் எல்லாம் மறப்பான்

சைத்தானே சைத்தானே - இந்த
சதியெல்லாம் செய்ய வைத்தானே


சரணம் 2

குருவியை கல்லால் அடிப்பான்
பின் பாம்பை கையால் பிடிப்பான்
அருவியில் நஞ்சைக் கலப்பான்
பின் தண்ணீர் உயர்வென படிப்பான்

காதலை காசுக்குள் தொலைப்பான்
பின் காதலே கண்ணென்று உரைப்பான்
ஏழைகள் தோழர்கள் என்பான்
பின் ஏழையைக் கண்டால் முறைப்பான்

சைத்தானே சைத்தானே - இந்த
சதியெல்லாம் செய்ய வைத்தானே

No comments:

Post a Comment