Friday, July 29, 2016

ஏனிது ஏனிது

பல்லவி

ஏனிது ஏனிது
மாற்றங்கள் ஏன் ஏன் இது
தன்னாலே உன் கண்கள்
என்னைப் பார்த்தது
உன்னாலே இதயத்தில்
காதல் பூத்தது ஏனிது?

அனு பல்லவி

நிலவாக நெஞ்சம் குளிர்ந்தது
வெண்முகிலாய் இதயம் பறந்தது
பறவை போல் சிறகு முளைத்தது
உள்ளத்தில் அலையடித்தது

சரணம் 1

புல் என்னில் பனித்துளி போல
உந்தன் ஞாபகம் துளிர்க்கிறதே
சொல்லடி சகி என்னடி செய்தாய்
இருதயம் இப்படி சிலிர்க்கிறதே

இரவிலும் இவள்
பகலிலும் இவள்
நினைவுகள் தொல்லை தருகிறதே

உணர்விலும் இவள்
உயிரிலும் இவள்
காதல் மழைத் துளி பொழிகிறதே

நீயில்லா வாழ்வெனக்கு தேவையில்லையே!


சரணம் 2

கனவில் இவள் கைவிரல் கொண்டு
எந்தன் கன்னம் வருடுகிறாள்
நனவில் இவள் கண்கள் கொண்டு
எந்தன் நெஞ்சை திருடுகிறாள்

எது இது என
இது அது என
பல கற்பனைகள் தருகின்றாள்

விருவிரு என
துருதுரு என
நகர்ந்து சிரித்து கொல்கின்றாள்

இரவில் அவள்; வானவில்லை காணச் செய்கிறாள்

No comments:

Post a Comment