Friday, July 29, 2016

வாழ்ந்தால் உன்னோடு வாழனும்

பல்லவி

வாழ்ந்தால் உன்னோடு வாழனும்
வீழ்ந்தால் உன் நெஞ்சோடு சாயணும்
உன் பார்வை என்றும் நானாகனும்

வசந்தம் கண்முன்னே தோன்றனும்
வசந்தத்தின் வாசல் நீயாகனும்
என் காதல் கடல் தாண்டி சேரணும்

நரணம் 1

சேர்த்து வைத்த இனிமையெல்லாம்
சில்லறையா சிதறுது
பூத்திருந்த பூக்கள் இப்போ
ஒன்னு ஒன்னா உதிருது

ஏற்றி வச்ச தீபச் சுடர
காத்து வந்து விரட்டுது
பூட்டி வச்ச ஆசையெல்லாம்
சாவி கேட்டு மிரட்டுது

சரணம் 2

வாட்டி நிற்கும் ஏக்கமின்று
வட்டம் போட்டு சுத்துது
போட்டி போட்டு என் மனசும்
நெருப்பு இன்றி பத்துது

காலம் நேரம் சதிகள் செஞ்சு
நம்ம பிரிச்சு வைக்குது
ஊசி போல வேதனைகள்
உள் நுழைந்து தைக்குது

பெண்ணே பெண்ணே பொங்கி எழு

பல்லவி

பெண்ணே பெண்ணே பொங்கி எழு
வன்செயல் கண்டால் சீறி எழு
மௌனம் இனியும் வேண்டாம்
சத்தமிடு!

கடந்த காலம் மறந்து விடு
கவலை யாவும்; துறந்து விடு
வீரம் கொண்ட வேங்கையாய்
எழுந்துவிடு!

நீ தானே உலகின் கண்ணம்மா....
நீயின்றி உயிர்கள் ஏதம்மா

வானைத் தட்டும் கைகள் உனதாகட்டும்
உந்தன் பெருமை ஓங்கட்டும் எட்டுத் திக்கும்!

சரணம் 1

பெண்ணை மதித்திங்கு வாழும் ஆடவர்
எத்தனை பேரம்மா?
அவள் கண்ணீர் துடைத்திட துடிக்கும்
உள்ளம் உண்மையில் யாரம்மா?

அச்சத்தில் வாழ்ந்த பெண்களை யாருமே
மதித்திடவில்லையம்மா
போர் வாளை போன்று தைரிய உள்ளம்;
வேண்டும் அவசரமா

இனி பார்வையில் பயங்களில்லை
தோல்வியும் உனக்கு இல்லை
புறப்படு பெண்ணே புது விதி செய்ய!

தீ கூட தொட்டால் தான் சுடும்
பெண் பார்வை பட்டாலே சுடும்


சரணம் 1

அன்னை தெரேசா என்பவர் உலகம்
போற்றிடும் தாயம்மா
இந்தியச் செல்வம் கல்பனா சாவ்லா
இதயத்தின் தீபமம்மா

சுசந்திகா, சானியா மிர்சா
சாதனைப் பெண்களம்மா
மக்களை மதித்த சந்திரிக்கா அம்மை
வீரத்தின் வடிவமம்மா

கணவர் காந்தியுடன்
அறப் போர் செய்து வந்த
கஸ்தூரி Bபாயும் சாதனை பெண்ணம்மா

பெண்தானே வாழ்வின் ஆதாரம்
அவளின்றி யாவும் சேதாரம்

தள்ளிப் போகாத

பல்லவி

ஆண்
தள்ளிப் போகாத
என்ன தாண்டிப் போகாத

பெண்
கிட்ட வராத
நீ முத்தம் தராத


சரணம் 1

ஆண்
நீ ஆசை ஊறும் பான
நான் அடங்கிடாத யான
பெண்
நீ குடிக்க பார்த்த தேன
நீயே கவுந்து போன

ஆண்
நீ போதை தரும் மோரு
வந்து என்னுடனே சேரு
பெண்
நான் ஆடி வரும் தேரு
அதில் அழகை மட்டும் பாரு

சரணம் 2

ஆண்
நெஞ்சில் இருக்கு வீரம்
வா தோப்பு பக்கம் போவோம்
பெண்
போய்யா அந்த ஓரம்
நானில்லை உந்தன் தாரம்

ஆண்
கள்ளச் சிறுக்கி வாடி
போதை ஏத்திப் போடி
பெண்
நான் போயிடுவேன் ஓடி
நீ வளக்கப் போற தாடி

ஏனிது ஏனிது

பல்லவி

ஏனிது ஏனிது
மாற்றங்கள் ஏன் ஏன் இது
தன்னாலே உன் கண்கள்
என்னைப் பார்த்தது
உன்னாலே இதயத்தில்
காதல் பூத்தது ஏனிது?

அனு பல்லவி

நிலவாக நெஞ்சம் குளிர்ந்தது
வெண்முகிலாய் இதயம் பறந்தது
பறவை போல் சிறகு முளைத்தது
உள்ளத்தில் அலையடித்தது

சரணம் 1

புல் என்னில் பனித்துளி போல
உந்தன் ஞாபகம் துளிர்க்கிறதே
சொல்லடி சகி என்னடி செய்தாய்
இருதயம் இப்படி சிலிர்க்கிறதே

இரவிலும் இவள்
பகலிலும் இவள்
நினைவுகள் தொல்லை தருகிறதே

உணர்விலும் இவள்
உயிரிலும் இவள்
காதல் மழைத் துளி பொழிகிறதே

நீயில்லா வாழ்வெனக்கு தேவையில்லையே!


சரணம் 2

கனவில் இவள் கைவிரல் கொண்டு
எந்தன் கன்னம் வருடுகிறாள்
நனவில் இவள் கண்கள் கொண்டு
எந்தன் நெஞ்சை திருடுகிறாள்

எது இது என
இது அது என
பல கற்பனைகள் தருகின்றாள்

விருவிரு என
துருதுரு என
நகர்ந்து சிரித்து கொல்கின்றாள்

இரவில் அவள்; வானவில்லை காணச் செய்கிறாள்

தவறாமல் தவறெல்லாம்


பல்லவி

தவறாமல் தவறெல்லாம்
செய்கிறானே சைத்தான் - அவன்
செய்யும் தவறு போதாதென்று
எம்மை செய்ய வைத்தான்


சரணம் 1

வீராப்பு பேசின பையன் பெண்
மாராப்பில் தன்னை தொலைப்பான்
சாராயம் தொடாத பையன் அந்த
காதல் போதையில விழுவான்

பெண்ணாசயில்லாம வாழ்ந்தவனும்
கண் ஜாடயில் கட்டுண்டு கிடப்பான்
மண்ணாசயில்லாம வாழ்ந்தவனும்
பேராசையில் எல்லாம் மறப்பான்

சைத்தானே சைத்தானே - இந்த
சதியெல்லாம் செய்ய வைத்தானே


சரணம் 2

குருவியை கல்லால் அடிப்பான்
பின் பாம்பை கையால் பிடிப்பான்
அருவியில் நஞ்சைக் கலப்பான்
பின் தண்ணீர் உயர்வென படிப்பான்

காதலை காசுக்குள் தொலைப்பான்
பின் காதலே கண்ணென்று உரைப்பான்
ஏழைகள் தோழர்கள் என்பான்
பின் ஏழையைக் கண்டால் முறைப்பான்

சைத்தானே சைத்தானே - இந்த
சதியெல்லாம் செய்ய வைத்தானே

அடியே நீயே கொலக்காரி

பல்லவி
ஆண் அடியே நீயே கொலக்காரி உன் அழகு என்ன கொல்லுதடி
பெண் திருடா அருகே வர வேண்டாம் நீ தள்ளி நில்லு ரெண்டு அடி

அனு பல்லவி
ஆண்
கொழந்த மனசுக் காரேன்டி கொஞ்ச நானும் வாரேன்டி
பெண் வந்திடாதே முன்னாடி - நான் தொட்டா உடையிற கண்ணாடி

சரணம் 1
ஆண் ஆளான பொண்ணே ஒன் நெனப்பால் ஆறடி உயரம் தேயுதடி.. பொன்மானே உன்ன ரசித்தேனே மனசு ஒம்மேல் சாயுதடி..
விண்மீன்கள் நெறஞ்ச வானத்துல நிலவு தனியா காயுதடி.. உருவான காதல் கரைபுரண்டு உயிரே ஒம்மேல் பாயுதடி..

சரணம் 2
பெண் சமநிலை இன்றி இருதயமும் அலைகள் ஆடும் கடலாகும் பார்வை தோட்டா துளைக்கிறதே இதுவும் காதல் மடலாகும்
ஒருநாள் உன்னை பிரிந்தாலும் மனதில் காதல் குளிர் ஏறும் உன்னைக் கண்ட பின்னாலே மருந்தே இன்றி குணமாகும்

காதல் வந்த பின்னாலே

காதல் வந்த பின்னாலே
வந்தேன் உந்தன் முன்னால்
கண்ணே உன்னை பார்த்தேதான்
காதல் சொன்னேன் கண்ணால்

காதல் வந்த பின்னாலே
வந்தேன் உந்தன் முன்னால்
கண்ணே உன்னை பார்த்தேதான்
காதல் சொன்னேன் கண்ணால்

.....
உயிரிலே பூத்திடும்
புதிய பூவை காப்பேன் நானே
கனவிலே தோன்றிடும்
தேவதையை பார்ப்பேன் நானே

சாலை வழியே உன்னோடு
நானும் நடைகள் பயின்றேன்
காலை மாலை தெரியாமல்
உந்தன் நினைவில் தவித்தேன்

...
என்னை இழுக்கும்
உன் விழியில் விழுந்தேன்
ஜீவன் சிலிர்க்க உன்
அருகில் இருந்தேன்

கரும்பாய் இனிக்கும்
உன் பேச்சில் கவிழ்ந்தேன்
இதமாய் இருக்கும்
உன் மூச்சில் தொலைந்தேன்

காவியம்ம் தோன்றுமே
காதலி நீ வந்தால் போதும்....


....
உன்னோடு நான் வாழும்
பொன் நாட்கள் வேண்டும்...
என்னோடு நீPயிருந்தால்
என் ஜீவன் இன்னும் வாhhhழும்.... நீ....ளுமே

காதோரம் சொல்கின்றாய் கவிதைகள் கோடி
சேதாரமில்லாத தங்கமே வாடி

காதல் வந்த பின்னாலே
வந்தேன் உந்தன் முன்னால்
கண்ணே உன்னை பார்த்தேதான்
காதல் சொன்னேன் கண்ணால்

காதல் வந்த பின்னாலே
வந்தேன் உந்தன் முன்னால்
கண்ணே உன்னை பார்த்தேதான்
காதல் சொன்னேன் கண்ணால்



உயிரிலே பூத்திடும்
புதிய பூவை காப்பேன் நானே
கனவிலே தோன்றிடும்
தேவதையை பார்ப்பேன் நானே

காதல் வந்த பின்னாலே
வந்தேன் உந்தன் முன்னால்
கண்ணே உன்னை பார்த்தேதான்
காதல் சொன்னேன் கண்ணால்


ஆசியாவின் அதிசயப் பூவே

ஆண் 
ஆசியாவின் அதிசயப் பூவே
கடல் சூழ்ந்த இலங்கைத் தீவே
சீ..கிரியா ஓவியம் நீயே
என்னைக் கொல்லும் அழகிய தீயே

குளிர் மார்கழித் தூறல் போல்
நெஞ்சில் பெய்திடும் அழகே நீ
பனித் தூறிடும் நுவரெலியாவின்
குளிரே இளந் தளிரே

பெண்
தண்டவாளமாய் நீயிருந்தால்
யாழ்தேவியாய் நானிருப்பேன்
வளைந்தோடிடும் மகாவலியாய்
உன்னுடனே நான் இணைவேன்

ஆண் 
ஆசியாவின் அதிசயப் பூவே
கடல் சூழ்ந்த இலங்கைத் தீவே
சீ..கிரியா ஓவியம் நீயே
என்னைக் கொல்லும் அழகிய தீயே

பெண்  
என் அன்பே என் அன்பே
 கொழும்பு துறைமுகமே
உன்னைக் காண நான் வருவேன்
ரத்தின புரி தந்த
மாணிக்கமே நீயே

ஆண்  
கிண்ணியா மாம்பழமே
உன்னை பறிப்பேன் நான் தினமே
கன்னியா சுடு கிணறே
உன்னை குளிப்பேன் நானே

பெண்  
என்னைத் தீண்டும் நேரம் எல்லாம்
துன்ஹிந்தை நீர் வீழ்ச்சியானேன்
நீ என்னை அணைக்கும் நொடியில்
கல்கிஸ்ஸை கடல் போல் ஆனேன்

வெப்பம் மேலிடும் வெலிகமயின்
ஐஸ்கிரீம் ஆக நான் ஆனேனே
குளிர் தியத்தலாவை தேநீர்;
போல் நானும் உனக்கானேன்

பூவே பூவே காதல் பூவே

பல்லவி

பூவே பூவே காதல் பூவே
நீயே என்னை நேசித்தாயே
யாவும் இன்பமடி – உன்னால்
வாழத் தோணுதடி

அழகே

சரணம் 1

தங்க சிலையே
நானும்; உன்னை
சேரும் நாள் எதுவோ

காதல் வானில்
நானோர் பறவை
உன்னை வட்டமிடுவேன்

கண் ஜாடையில் கண் ஜாடையில்
கரைந்தேனே
உன் பார்வையில் உன் பார்வையில்
தொலைந்தேனே

பேசும் ரோசாப் பூவே
உன்னால் நெஞ்சில்
காதல் வாசம்

காதலி பூமொழி பேச்சென்னை
என்னை அள்ளுதே
ஓஹோஹோ
காதலி பாரடி என் காதல்
காதல் வெல்லுதே

உந்தன் சிரிப்பிலே பூவைக் கண்டேன்

ஆண்

உந்தன் சிரிப்பிலே பூவைக் கண்டேன்
பூவின் இதழாய் அதரம் கண்டேன்
நெஞ்சம் பறித்திடும் அழகைக் கண்டேன்
வற்றிவிட்ட உன் இடையைக் கண்டேன்

உன்னால் தோன்றுதே பொற்காலம்
உலா போகுதே வெண் மேகம்
உன்னைத் தேடுதே என் வானம்
நிலவே ஏ நிலவே

பெண்

அலை மோதிடும் கடலாக
என்னை மோதினாய் அன்பாலே
வலை வீசுதே பார்வைகள்
ஐயோ ஐயையோ



ஆண்

நதியே நான் தனியே
காத்திருந்தேன் வா அருகே
கவியே இளம் பிறையே
நீ பேசும் கிளியே



பெண்
என்னைத் தீண்டிடும் நேரம் எல்லாம்
கண்கள் பார்த்து நீ சிரிப்பாய் சிரிப்பாய்
கொஞ்சம் நானும்தான் கோபம் கொண்டால்
என்னைப் பார்த்து நீ ரசிப்பாய் ரசிப்பாய்

அலை மோதிடும் கடலாக
 என்னை மோதினாய் அன்பாலே
வலை வீசுதே பார்வைகள்
ஐயோ ஐயையோ

நீயும் நானும் சேரும் காலம்

பல்லவி

பெண்
நீயும் நானும் சேரும் காலம்
மேலும் மேலும் இன்பமாகும்
மாசம் வருசமென்று உன்கூட
வாழத் தோணும்

ஆண்
விழி மேகங்கள்
காதல் நீரை பொழிகிறதா
சிறு பார்வைகள்
ஊசி போல நுழைகிறதா

இருவர்
இதயத்தில் காதல் கிளிகள்
கொஞ்சிப் பேசி மகிழ்கிறதா

சரணம் 1

ஆண்
காதல் தூண்டில் போட்டவளே
நானும் சிறு மீனா
லட்சம் இன்பம் தந்தவளே
நீயும் வரம் தானா



பெண்
மனதை சுற்றிப் பாக்குறியே
நானும் மலர்த் தேனா
வெட்கம் தின்னப் பாக்கிறதே
அருகே வர வேணா


சரணம் 2

பெண்
காதல் நோயில் ஆசைப்பட்டு
நானும் வீழ்ந்ததேனோ
வலிகள் கூட இன்பமாகும்
காதல் வந்தால் தானோ

ஆண்
பார்வை தனை என் கிழக்கில்
வீசிப் போனதேனோ
கருவிழியால் மௌன மொழி
பேசிப் போனதேனோ

காலம் என்மேல் கோபம்கொண்டு

பல்லவி

காலம் என்மேல் கோபம்கொண்டு
காதல் வலியைத் தந்தது..
வலியை மட்டும் தந்துவிட்டு
வாழு என்று சொன்னது

அனு பல்லவி

வாழ்ந்த வாழ்க்கை போதுமேன்று
வாழ்க்கை எனக்குச் சொன்னது
நினைவுகள் நெஞ்சில் மேலோங்கி
என்னை வதைத்து தின்றது

சரணம் 1

தீபம் ஏற்றும் எண்ணத்தில்
தீப் பிடித்துக் கொண்டது
லாபம் என்ன உள்ளதென்று
எந்தன் வாழ்வைக் கொன்றது

சாபம் வந்து விழுந்ததுபோல்
காதல் மரமும் காய்ந்தது
கோபம் கொண்ட விதிதானோ
சோகம் தந்து ஓய்ந்தது

சரணம் 2

பூவாய் நினைத்த காலங்கள்
புயலாய் மாறிப் போனது
தேனாய் இனித்த நினைவெல்லாம்
தேளைப் போல ஆனது

பௌர்ணமி போன்ற என் காதல்
தேய் பிறையாகிப் போனது..
சமுத்திரம் போன்ற கனவெல்லம்
ஓடை என்று ஆனது