Monday, November 21, 2016

சறுக்கு மரம் போல உந்தன் கண்ணுல

ஆண்

சறுக்கு மரம் போல உந்தன் கண்ணுல
சறுக்கி விழுந்து போனே இந்த ஆம்பள

போத தரும் கள்ளுப் பான நீயடி
இன்னக்கி கோப்பட்டு நிக்கிறியே  ஏனடி

வெண்டிக்காயி வெரலு நானும் தொட்டாச்சி
அதப் பாத்துபுட்டு  வெடிவெடிக்கிது பட்டாசு

ஆள வெட்டும் பாக்குவெட்டி நீயடி அதில
மாட்டிக்கிட்ட பாக்கு இங்க நானடி

போதையிலும் உன்ன தானே தேடுறேன்
நீ இல்லேனாக்கா சாவக்கூட தோணுதே

ஒதட்டுல நீ சாயம் பூசி போறியா
இல்ல உதட்டு மேல மாயம் பூசி போறியா

காதுல நீ ஜிமிக்கி மாட்டிப் போறியா
இல்ல எனக்கு மட்டும் டிமிக்கி காட்டிப் போறியா

உரிச்சி வச்ச தோடம் பழம் நீயடி
இப்போ பழிப்பு காட்டி போறதென்ன ஞாயம்டி

பச்சோந்தியாயா இருப்பவளே கேளுடி
நீ கண்ணுக்குள் வச்சிருக்க வேலுடி

நீ பார்த்துபுட்டா ஏறுதுங்க கிக்கு டி
என்ன கொன்னுப்புட்டு போறதா ஒன் திட்டம் டி

நெஞ்சுக்குள் நெருப்ப ஏன்டி மூட்டுற
அதில் சிரிச்சு சிரிச்சு பெற்றோலத்தான் ஊத்துற

சாம்பலாக ஆகிட்டேன் நானும்தான்
அதையே ரசிச்படி போறியே நீயும்தான்

உன் சொந்தக்காரி யாரு பத்ர காளியா
உன் பேச்செல்லாமே இருக்குதடி போலியா

துண்டுதுண்ணா நானும் ஒடஞ்சி போறேனே
கண்ணும் நெஞ்சும் கலங்கி கலங்கி வாடுறேன்

ஏடிஎம் ஆ என்ன தானே தேடுற ஏன்டி
காச்சில்லன்னா கழட்டி விடப் பாக்குற

கொரங்கு புத்தி நீயுமாடி காட்டுற
உன்னய நிறுத்தனுன்டி தண்ணியில்லா காட்டுல

பேயுமில்ல பிசாசுமில்ல இங்கடா
இது ரெண்டு சேந்த படைப்புதான் பொண்ணுடா


பெண்

பொண்ணுங்கள எக்குத்தப்பா நெனக்கறியே
ஆனா பெண்ணில்லனா வாழ்க்கல்லன்னு பொலம்புரியே

டைம்பாஸூக்கு பொண்ணுங்கள தேடுறியே
ஆனா டைம்போம் என்று பொண்ணுங்கள பழிக்கிறியே

ரோசா என்று சொல்லித்தானே மயக்குறியே
ஆனா காச மட்டும் செலவழிக்க தயங்குறியே

நாயப் போல சுத்தி சுத்தி நிக்கிறியே
ஆனா நாய விட கேவலமா நெனக்கிறியே

கொரங்கு போல மனசு மனசு தாவுறியே
ஆனா உத்தமனா ஊருக்கு நீ காட்டுறியே

வேலி தாண்ட நேரம் எது பாக்குறியே
ஆனா தாலியத்தான் கேட்டுப்புட்டா நழுவுறியே

செல்லம்கொஞ்சி சாதிக்கத்தான் பாக்குறியே ஆனா
ஷசெல்|லக்கூட தருவதற்கு மறுக்குறியே

சந்தேகந்தான் புடிச்சிக்கிட்டு பாக்குறியே
சந்தோசத்த ரெண்டு துண்டா ஒடக்கிறியே

அப்பன நீ தப்புத் தப்பா பேசுறியே
தப்பெதுவும் செய்யாதபோல நிக்கிறியே

No comments:

Post a Comment