Tuesday, November 1, 2016

உசுருக்குள்ளே உசுருக்குள்ளே

பல்லவி

உசுருக்குள்ளே உசுருக்குள்ளே
தீ புடிச்சு எரியுதே
மனசுக்குள்ள மனசுக்குள்ள
காதல் ரத்தம் வழியுதே

அனு பல்லவி

கனிமொழியே கனிமொழியே
கண்ணெதிரே உன்னை நான் தொலைத்தேன்
என் விழியே என் விழியே
என் விரல் கொண்டு உன்னை நான் துளைத்தேன்


சரணம் 1

நான் வளர்த்த காதல் செடியோ
திசைகள் மாறி பூத்ததென்ன
உயிர்துளியான எந்தன் காதல்
உருமாறியே போனதென்ன

மாயத் திரையோ மேலே எழுந்து
மனதின் திரையை மறைத்ததென்ன
மயிலிறகு கொண்டு வருடி வருடி
மனப் பாறையும் கரைந்ததென்ன

காதலென்ன பாசமென்ன
எல்லாம் மாயமாகிப் போனதென்ன?

சரணம் 2

வானவில்லை கண்ட பெண்மை
வானம் என்னை மறந்ததென்ன
வளைந்தோடிய நதிகள் எல்லாம்
வழிகள் மாறி போனதென்ன

விண்மீன் அழகில் மாட்டிக்கொண்டு
நிலவின் ஒளியை மறுத்ததென்ன
கானல் நீரில் கனவினைத் தொலைத்து
கண்களை கண்களை மறுப்பதென்ன

காதலென்ன பாசமென்ன
எல்லாம் மாயமாகிப் போனதென்ன?

No comments:

Post a Comment