Tuesday, November 1, 2016

நான் தந்த மடலினை

பல்லவி

நான் தந்த மடலினை
நடுவீதியில் எறிந்தவளே
நான் தந்த மனசை
என்ன செய்யப் போகிறாய்?

எனக்குள் தீ கடலினை
பொங்கியெழச் செய்தவளே
உனக்காக வாழும் என்னை
என்ன செய்யப் போகிறாய்?

சரணம் 1

பாசத்தைப் புரிவதில்
அசட்டையாக இருக்கிறாய்
என் நெஞ்சுக்குள் மட்டும்
அட்டையாக இருக்கிறாய்

தூக்கத்தை கெடுப்பதில்
ராட்சசியாய் இருக்கிறாய்
துக்கத்தை மட்டும்
குறைச்சலின்றி தருகிறாய்


சிட்டாக சிறகடித்து
வெட்டென மறைகிறாய்!

சரணம் 2

எல்லாமே மறந்திருந்தால்
என் முன்னே வருகிறாய்
உன்னை நாடி நான் வந்தால்
உடனடியாய் மறைகிறாய்

விடை தெரியா வினாவாக
எனக்குள்ளே எழுகிறாய்
அணை கடந்த வெள்ளம்போல்
உயிருக்குள் விழுகிறாய்

சட்டென்று என்னைப் பார்த்து
மொட்டென மலர்கிறாய்!

No comments:

Post a Comment