Tuesday, November 1, 2016

வெண்மதியே வெண்மதியே

பல்லவி

பெண்
வெண்மதியே வெண்மதியே
ஒருமுறை என்னைப் பாராய்
உன் முகம் காண ஆவல்கொண்டேன்
அனுதினம் என்னிடம் வாராய்

அனு பல்லவி

பெண்
ஒற்றைப் பூவின் காதல் இது
என்றும் என்றும் தீராதது
நாணம் வந்து தாலாட்டுது
கேளாய்


சரணம் 1

ஆண்
பகலவன் விழித்து காலையில்
பவனி வர முதல்
வேண்டும் வேண்டும் அல்லிப் பூவே
உன் இதழ்

பெண்
நமது காதலின் சாட்சிகளோ
அந்த கரு முகில்
புயலும் தோற்கும் எங்கள்
காதலின் உறுதியில்

ஆண்
ஒருமுறை தீண்டு
உயிர் கொஞ்சம் கூடும்
மறுமுறை தீண்டு
மரித்திட தோணும்

சரணம் 2

பெண்
மழையின் சாரல் உந்தன்
பாசம் அறியலையோ
குளிரும் தென்றல் உந்தன்
காதல் உணரலையோ

ஆண்
வெள்ளி விண்மீன் உந்தன்
கருவிழி காணலையோ
துள்ளி ஓடும் நதிகள்
உன் இடை பார்க்கலியோ

பெண்
இரு விழி பாரு
இதயத்தைக் கூறும்
உயிர் வரை பாரு
காதலின்னும் கூடும்  

No comments:

Post a Comment