Tuesday, November 1, 2016

பழரச உதட்டிலே விஷம் வந்து வழியுதே

பல்லவி

பழரச உதட்டிலே விஷம் வந்து வழியுதே
மலர்ச் செண்டு விழிகளில் பாம்புகள் நெளியுதே
உயிரோடு கொன்றவளின் நினைவுகள் தெறிக்குதே
கைகோர்த்த காலங்கள் நெருப்பாக எரிக்குதே

இது இது இது
காதலின் துரோகம் என்பதா
நரம்பினில் ஓடுவதெல்லாம் நஞ்சென்பதா?


சரணம் 1

மணற் பரப்பினில் மங்கை மடியினில்
மனசெல்லாம் மலர் பூத்ததே
இன்று எண்ணியெண்ணி அதை அழித்திடும்
காலங்கள் எனக்கானதே

உயிர் திருகிடும் உயிர் திருகிடும்
காலங்கள் ரொம்ப கனிவானதே
இன்று கனிவெல்லாம் வற்றி உருமாறி
காயங்கள் எனக்கானதே


சரணம் 2

நான் அழுதிடும் நொடி எழுதிடும்
வரி எல்லாம் உனக்கானதே
எண்ணி துடித்திடும் மனம் வெடித்திடும்
வலியெல்லாம் எனக்கானதே

பொழுதெல்லாம் பின் இரவெல்லாம்
பறவைகள் சுகம் காணுதே
இடையிடை அதை காணும் மனம் மெல்ல
ஒரு மெழுகானதே சுமை கூடுதே

No comments:

Post a Comment