Sunday, October 16, 2016

நீயே எந்தன் காதல் ஜோதி

நீயே எந்தன் காதல் ஜோதி

நானே உந்தன் வாழ்வின் பாதி


கோடிப் பூக்கள் இன்று

நெஞ்சில் ஒன்றாய் பூத்ததென்ன


உயிரே

காதல் வானில் கவிதையாக

பூத்த பௌர்ணமியே
..
சின்னச் சிரிப்பில் என்னை வென்ற

தங்கத் தேன் துளியே



கண் ஜாடையில் கண் ஜாடையில்

கரைந்தேனே

உன் பார்வையில் உன் பார்வையில்

தொலைந்தேனே


பேசும் ரோசாப் பூவே

உன்னால் நெஞ்சில் காதல் வாசம்

Thursday, September 22, 2016

ஒரு பார்வை பார்த்தால் போதும்

ஒரு பார்வை பார்த்தால் போதும்
அதில் வீழ்ந்து போவேனே
நெஞ்சில் ஊசிபோல் வலியேறும்
அதைதானே தானே கேட்டேனே

ஒரு பார்வை பார்த்தால் போதும்
அதில் வீழ்ந்து போவேனே
நெஞ்சில் ஊசிபோல் வலியேறும்
அதைதானே தானே கேட்டேனே

உயிரிலே பூத்திடும் புதிய பூவே
நீயே நீயே
மனதிலே தோன்றிடும்
நிலவு நீயே காதல் தீயே

ஒரு பார்வை பார்த்தால் போதும்
அதில் வீழ்ந்து போவேனே
நெஞ்சில் ஊசிபோல் வலியேறும்
அதைதானே தானே கேட்டேனே

பனியாய் பொழியும் உன்
நினைவில் குளித்தேன்
இரவாய் பகலாய் நான்
என்னை மறந்தேன்

இளமைச் செடியில் நான்
பூக்கள் பறித்தேன்
பூவின் சிரிப்பை நான்
புதிதாய் ரசித்தேன்

வார்த்தைகள்; ஏதடி
காதலி உன்னைப் பாட
ரசிக்கிறேன் நானடி
சிலைகள்கூட தோற்குமே

உன்னோடு நான் வாழும்
பொன் நாட்கள் வேண்டும்
என்னோடு நீ சேரு
என் ஜீவன் உயிரோடு வாழும்
நீளுமே....

நிழலுக்கு நிறம் தந்த
மாந்தோப்புக் கிளியே
நீ வேறு நான் வேறா
சொல்ல்லலு

ஒரு பார்வை பார்த்தால் போதும்
அதில் வீழ்ந்து போவேனே
நெஞ்சில் ஊசி போல் வலியேறும்
அதைதானே தானே கேட்டேனே

Friday, July 29, 2016

வாழ்ந்தால் உன்னோடு வாழனும்

பல்லவி

வாழ்ந்தால் உன்னோடு வாழனும்
வீழ்ந்தால் உன் நெஞ்சோடு சாயணும்
உன் பார்வை என்றும் நானாகனும்

வசந்தம் கண்முன்னே தோன்றனும்
வசந்தத்தின் வாசல் நீயாகனும்
என் காதல் கடல் தாண்டி சேரணும்

நரணம் 1

சேர்த்து வைத்த இனிமையெல்லாம்
சில்லறையா சிதறுது
பூத்திருந்த பூக்கள் இப்போ
ஒன்னு ஒன்னா உதிருது

ஏற்றி வச்ச தீபச் சுடர
காத்து வந்து விரட்டுது
பூட்டி வச்ச ஆசையெல்லாம்
சாவி கேட்டு மிரட்டுது

சரணம் 2

வாட்டி நிற்கும் ஏக்கமின்று
வட்டம் போட்டு சுத்துது
போட்டி போட்டு என் மனசும்
நெருப்பு இன்றி பத்துது

காலம் நேரம் சதிகள் செஞ்சு
நம்ம பிரிச்சு வைக்குது
ஊசி போல வேதனைகள்
உள் நுழைந்து தைக்குது

பெண்ணே பெண்ணே பொங்கி எழு

பல்லவி

பெண்ணே பெண்ணே பொங்கி எழு
வன்செயல் கண்டால் சீறி எழு
மௌனம் இனியும் வேண்டாம்
சத்தமிடு!

கடந்த காலம் மறந்து விடு
கவலை யாவும்; துறந்து விடு
வீரம் கொண்ட வேங்கையாய்
எழுந்துவிடு!

நீ தானே உலகின் கண்ணம்மா....
நீயின்றி உயிர்கள் ஏதம்மா

வானைத் தட்டும் கைகள் உனதாகட்டும்
உந்தன் பெருமை ஓங்கட்டும் எட்டுத் திக்கும்!

சரணம் 1

பெண்ணை மதித்திங்கு வாழும் ஆடவர்
எத்தனை பேரம்மா?
அவள் கண்ணீர் துடைத்திட துடிக்கும்
உள்ளம் உண்மையில் யாரம்மா?

அச்சத்தில் வாழ்ந்த பெண்களை யாருமே
மதித்திடவில்லையம்மா
போர் வாளை போன்று தைரிய உள்ளம்;
வேண்டும் அவசரமா

இனி பார்வையில் பயங்களில்லை
தோல்வியும் உனக்கு இல்லை
புறப்படு பெண்ணே புது விதி செய்ய!

தீ கூட தொட்டால் தான் சுடும்
பெண் பார்வை பட்டாலே சுடும்


சரணம் 1

அன்னை தெரேசா என்பவர் உலகம்
போற்றிடும் தாயம்மா
இந்தியச் செல்வம் கல்பனா சாவ்லா
இதயத்தின் தீபமம்மா

சுசந்திகா, சானியா மிர்சா
சாதனைப் பெண்களம்மா
மக்களை மதித்த சந்திரிக்கா அம்மை
வீரத்தின் வடிவமம்மா

கணவர் காந்தியுடன்
அறப் போர் செய்து வந்த
கஸ்தூரி Bபாயும் சாதனை பெண்ணம்மா

பெண்தானே வாழ்வின் ஆதாரம்
அவளின்றி யாவும் சேதாரம்

தள்ளிப் போகாத

பல்லவி

ஆண்
தள்ளிப் போகாத
என்ன தாண்டிப் போகாத

பெண்
கிட்ட வராத
நீ முத்தம் தராத


சரணம் 1

ஆண்
நீ ஆசை ஊறும் பான
நான் அடங்கிடாத யான
பெண்
நீ குடிக்க பார்த்த தேன
நீயே கவுந்து போன

ஆண்
நீ போதை தரும் மோரு
வந்து என்னுடனே சேரு
பெண்
நான் ஆடி வரும் தேரு
அதில் அழகை மட்டும் பாரு

சரணம் 2

ஆண்
நெஞ்சில் இருக்கு வீரம்
வா தோப்பு பக்கம் போவோம்
பெண்
போய்யா அந்த ஓரம்
நானில்லை உந்தன் தாரம்

ஆண்
கள்ளச் சிறுக்கி வாடி
போதை ஏத்திப் போடி
பெண்
நான் போயிடுவேன் ஓடி
நீ வளக்கப் போற தாடி

ஏனிது ஏனிது

பல்லவி

ஏனிது ஏனிது
மாற்றங்கள் ஏன் ஏன் இது
தன்னாலே உன் கண்கள்
என்னைப் பார்த்தது
உன்னாலே இதயத்தில்
காதல் பூத்தது ஏனிது?

அனு பல்லவி

நிலவாக நெஞ்சம் குளிர்ந்தது
வெண்முகிலாய் இதயம் பறந்தது
பறவை போல் சிறகு முளைத்தது
உள்ளத்தில் அலையடித்தது

சரணம் 1

புல் என்னில் பனித்துளி போல
உந்தன் ஞாபகம் துளிர்க்கிறதே
சொல்லடி சகி என்னடி செய்தாய்
இருதயம் இப்படி சிலிர்க்கிறதே

இரவிலும் இவள்
பகலிலும் இவள்
நினைவுகள் தொல்லை தருகிறதே

உணர்விலும் இவள்
உயிரிலும் இவள்
காதல் மழைத் துளி பொழிகிறதே

நீயில்லா வாழ்வெனக்கு தேவையில்லையே!


சரணம் 2

கனவில் இவள் கைவிரல் கொண்டு
எந்தன் கன்னம் வருடுகிறாள்
நனவில் இவள் கண்கள் கொண்டு
எந்தன் நெஞ்சை திருடுகிறாள்

எது இது என
இது அது என
பல கற்பனைகள் தருகின்றாள்

விருவிரு என
துருதுரு என
நகர்ந்து சிரித்து கொல்கின்றாள்

இரவில் அவள்; வானவில்லை காணச் செய்கிறாள்

தவறாமல் தவறெல்லாம்


பல்லவி

தவறாமல் தவறெல்லாம்
செய்கிறானே சைத்தான் - அவன்
செய்யும் தவறு போதாதென்று
எம்மை செய்ய வைத்தான்


சரணம் 1

வீராப்பு பேசின பையன் பெண்
மாராப்பில் தன்னை தொலைப்பான்
சாராயம் தொடாத பையன் அந்த
காதல் போதையில விழுவான்

பெண்ணாசயில்லாம வாழ்ந்தவனும்
கண் ஜாடயில் கட்டுண்டு கிடப்பான்
மண்ணாசயில்லாம வாழ்ந்தவனும்
பேராசையில் எல்லாம் மறப்பான்

சைத்தானே சைத்தானே - இந்த
சதியெல்லாம் செய்ய வைத்தானே


சரணம் 2

குருவியை கல்லால் அடிப்பான்
பின் பாம்பை கையால் பிடிப்பான்
அருவியில் நஞ்சைக் கலப்பான்
பின் தண்ணீர் உயர்வென படிப்பான்

காதலை காசுக்குள் தொலைப்பான்
பின் காதலே கண்ணென்று உரைப்பான்
ஏழைகள் தோழர்கள் என்பான்
பின் ஏழையைக் கண்டால் முறைப்பான்

சைத்தானே சைத்தானே - இந்த
சதியெல்லாம் செய்ய வைத்தானே