Sunday, March 5, 2017

ஹார்மோன் எல்லாம் காதல் கேட்கும்

பல்லவி

ஹார்மோன் எல்லாம் காதல் கேட்கும்
இதயத்தின் நாளங்கள் வயலின் இசைக்கும்
என் மனம்கொத்திப் பறவை உன்னைக் கொத்தும்
எனக்குள்ளே மின்னல்கள் கோடி பாயும்

நெஞ்சுக்குள்ளே உன்னை எண்ணி
ஆயிரம் எண்ணங்கள் வண்ணங்களாகும்
என்னை சுடும் பனி மலரே போதும் இந்த
ஆனந்த அவஸ்தைகள் என்றுதான் தீரும்


சரணம் 1

காதல் கூட்டில் உன்னை வைத்தேன்
கண்ணிமைகொண்டு நான் உன்னை காத்தேன்
என் உயிர் துளிகளிலே காதல் ஏந்தி
உன் காலடி காலடி தேடியே வந்தேன்

தென்றல் காற்றிடம் மலர்கள் நாணுமா கண்ணே
இது என்ன மாயமோ பார்த்தால் பதறுகிறேன்;
மழைச் சாரல் எனக்குள்ளே

கைகள் கோர்க்க சாலை இன்னும்
நீளுமோ என்று என் உள்மனம் கெஞ்ச
என் நிழல் அடம்பிடித்து உந்தன் பின்னே
சென்றிடு சென்றிடு என்றென்னை மிஞ்ச.


சரணம் 2


வானம் தேடும் பறவை போல
உன்னிடம் தாவுது என் மனம் மெல்ல
என் உயிர் வலிக்கிறதே உன்னைக் காணும்
நொடியினை கடந்து நான் எங்ஙனம் செல்ல

உன் பட்டு கன்னங்கள் என் முத்தங்கள் தாங்கிடுமா?
அந்த செல்லக் கொலுசொலி சங்கீதம் பாடிடுதோ
இந்த அவஸ்தை போதுமே

எந்தன் நெஞ்ச என்ன செஞ்ச
நீயின்றி என் மனம் என்னைக் கொல்லும்
அந்த மன்மதக் குருவி முத்தம் தந்து
உன் விரல் பின்னியே போகச் சொல்லும் ம் ம்

No comments:

Post a Comment